
யுத்த
நடவடிக்கைகள் காரணமாக மந்த கதியில் நடைபெற்று வந்த வடக்கு
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் செயற்பாடுகளை
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலில் வடக்கு கிழக்கு
மாகாணத்தின் சகல மாவட்டங்களுக்கும் விஸ்தரித்து அதன்
செயற்பாடுகளை பரவலாக்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து
வருகின்ற இந்த வேளையில் கடந்த 2010.02.27 ஆந் திகதி யாழ்
மாவட்டத்தில் புதிய இடைக்கால நிருவாகிகள் தெரிவு
செய்யப்பட்டதோடு இல.40, பழம் வீதி, கந்தர் மடம்,
யாழ்ப்பானத்தில் யாழ் மாவட்ட அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்து
வைக்கப்பட்டது.
யாழ் மாவட்டத் தலைவரும், தலைமைச் செயலக உப தலைவருமான
திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாக
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி யாழ் மாவட்டத்தில் மே தின
நிகழ்வு ஒன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளதையிட்டு
நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வில் சங்க
வரலாற்றில் முதன் முறையாக சங்கத்தில் சிறப்பாக சேவையாற்றி ஓய்வு
பெற்ற எமது மூத்த உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டும்
நிகழ்வானது மிகவும் வரவேற்கப்படத்தக்க விடயமாக உள்ளது.
[மேலும்] |